ஸ்டீலுக்கு மாற்று : Bamboo Centering Works
ஸ்டீல் கம்பிகளுக்கு மாற்று இயற்கை பொருட்களை கட்டுமானங்களில் பயன்படுத்துவதற்கு நாம் இன்னமும் கூட மிகவும் தயங்குகிறோம். ஆனால், வியட்நாமில் அப்படி இல்லை. கான்கிரீட் அமைக்கும்போது வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஸ்டீல் கம்பிகளுக்கு ( REBAR) பதிலாக மூங்கில் கொம்புகளையே பயன்படுத்துகிறார்கள். காம்பவுண்ட் சுவர்கள், பண்ணை வீடுகள், போன்றவற்றிற்க்கு இம்முறை மிகவும் பொருத்தமானதாகவும், சிக்கனமாகவும் இருப்பதாக வியட்நாம் மக்கள் தெரிவிக்கிறார்கள்.
சென்ட்ரிங் கம்பிகளுக்குப் பதிலாக மூங்கில் கம்பிகளைப் பயன்படுத்தும் இவர்கள் மூங்கில்களை ஒன்றோடு
ஒன்று பிணைப்பதற்கு எளிதில் மக்காத நைலான் கயிறுகள்ல்லது ஸ்டீல் ஒயர்கள் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு இந்த உத்தியை உள்ளூர் நிர்வாகம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டு ஓ.கே செய்திருக்கிறது.

Comments

Popular Posts